முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      மதுரை
Image Unavailable

மதுரை.- மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்                 கொ.வீர ராகவ ராவ்,  தலைமையில்  நடைபெற்றது.
 இக்கூட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
     மேலும் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் பண்ணை உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வாவிடமருதூர்-ஐஐ சார்ந்த 5 பயனாளிகளுக்கு (முழுவிலை ரூ.7670ல் மானியத் தொகை ரூ.6136) விசைத்தெளிப்பான்களையும்,
 மாவட்ட தோட்டக்கலைத்துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டம் 2017-18ன் கீழ் ஒரு பயனாளிக்கு 50 சதவிகிதம் மானியத்தில் மண்புழு உரக்கூடம் அமைப்பதற்காக ரூ.50,000 மதிப்பிலான காசோலையையும், மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 50 சதவிகிதம் மானியத்தில் 2 பயனாளிகளுக்கு ளூயனநநெவ இனத்திற்காக மானியத்தொகை ரூ.7.10 இலட்சம் மதிப்பிலான பணி ஆணைகளையும், தேசிய நுண்ணீர்ப்பாசனத்திட்டம் 2017-18ன் கீழ் 3 பயனாளிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைப்பதற்காக மானியத்தொகை ரூ.1,77,928 மதிப்பிலான பணி ஆணைகளையும், தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் 2017-18ன் கீழ் வெங்காயம் சேமிப்பிற்கான கிடங்கு அமைப்பதற்காக 50 சதவிகிதம் மானியத்தில் 1 பயனாளிக்கு ரூ.87500 மதிப்பிலான காசோலையையும் மாவட்ட ஆட்சித்தலைவர்   வழங்கினார்.
 இக்கூட்;டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், வேளாண்மை இணை இயக்குநர்  செல்வபாண்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) .அனுசியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்  .சந்திரசேகரன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து