முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது இந்தியா

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

பே ஓவல்: ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை இந்தியா வீழ்த்தியுள்ளது.
 
திணறல்...
ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது.  இதில் 20-வது லீக் ஆட்டத்தில் பி- பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவும் ஜிம்பாப்வே அணிகளும் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய ஜிம்பாப்வே அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.

வெற்றி...
48.1 ஓவர்கள் தாக்கு பிடித்த ஜிம்பாப்வே அணி 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அனுகுல் சுதாகர் ராய் அதிகபட்சமாக  4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணி தரப்பில் ஷுபம் கிலி 59 பந்துகளில் 90 ரன்களும், ஹர்விக் தேசாய் 73 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து