முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பஸ் கட்டணம் மாற்றியமைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழகத்தில் பஸ் டிக்கெட் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக  தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் அமுலுக்கு வருகிறது. சாதாரண பேருந்துகளுக்கு 5 ரூபாயில் இருந்து 6 ருபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாநகர, நகர பேருந்துகளில் கட்டணம் குறைந்த பட்சம் 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விரைவு பேருந்துகளுக்கான கட்டணம், சொகுசு பேருந்துகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களில் 22 ஆயிரத்து 203 பேருந்துகள் உள்ளன. தினந்தோறும் சுமார் 2 கோடி பேர் தமிழக அரசின் பேருந்து சேவையால் பயனடைந்து வருகின்றனர். ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக அரசு பேருந்துகளின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சம் ரூ.25...
சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் தற்போது குறைந்தபட்சமாக மூன்று ரூபாயாக உள்ள கட்டணத்தை 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வெள்ளை போர்டு, பச்சைப் போர்டு மற்றும் டீலக்ஸ் வகை பஸ்களின் கட்டணம் அந்தந்த தூரத்துக்கு ஏற்ப உயரும். அதிகப்பட்ச கட்டண உயர்வு 25 ரூபாயாக இருக்கும். இதற்கிடையே போக்குவரத்து கழக பணிகளில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்க வேண்டிய தொகை மட்டும் ரூ.1500 கோடி நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு பஸ்களின் கட்டணங்களை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

7 ஆண்டுகளுக்குப் பின்...
தை பொங்கலுக்கு முன்பாக ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப்பப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பஸ் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே இந்த நஷ்டத்தை ஈடுகட்ட, கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. 7 ஆண்டுகளுக்குப்பின்னர் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளில் கட்டணம் குறைந்த பட்சம் 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விரைவு பேருந்துகளுக்கான கட்டணம், அதிநவீன சொகுசு பேருந்துகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து