முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர்க்கான மானிய விலை ஸ்கூட்டி திட்டத்திற்கு விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகம் 24 ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்

சனிக்கிழமை, 20 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழக அரசு அறிவித்த மானிய விலை ஸ்கூட்டி பெற 24 கேள்விகள் கொண்ட விண்ணப்பம் வரும் பிப்ரவரி 5 ம்தேதி வரை வழங்கப்படும் என்றுதமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி பிப்ரவரி 24 ம்தேதி மகளிருக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார், இதற்கான விண்ணப்பத்தில் 24 ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டுமென பொதுமக்களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அன்றைய முதல்வர் ஜெயலலிதா, அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மானிய விலைய ஸ்கூட்டி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதற்கான விண்ணப்பங்கள் வரும் 22 ம்தேதி முதல் அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. அதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கு 24 வகையான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்ப்டடுள்ளது.

அதன் விபரம் வருமாறு:
மானிய விலை ஸ்கூட்டி பெற கியர் இல்லாத அல்லது தானியங்கி கியருடன் கூடிய 125சிசி எந்திரத் திறன் கொண்ட புதிய இருச்சக்கர வாகனங்களுக்கு வாகன விலையில் ரூ.25000/- அல்லது 50சதவீதம் வாகன விலை இதனில் குறைவான தொகை பயனாளிக்கு அரசினால் வழங்கப்படும். இருசக்கர வாகனம் 01.01.2018 பின்னர் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.1.நிறுவனப் பணியிலுள்ள மற்றும் முறைசாரா பணியிலுள்ள பெண்கள்.2. கடைகள் மற்றும் இதர நிறுவனங்களிலுள்ள பெண்கள். 3.அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மகமை அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள்.4.பெண் வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண் வங்கி வழிநடத்துநர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார (பெண்) ஆர்வலர்கள்..வயது வரம்புவருமான வரம்பு மற்றும் இதர தகுதிகள் தமிழ்நாட்டை சார்ந்த 18 முதல் 40 வயது வரையுள்ள இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் உள்ள பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்..மேலும் ஊரின் கடைநிலைப்பகுதி மலைப்பகுதி, மகளிரைக்குடும்பதலைவராக கொண்ட பெண், ஆதரவற்ற மகளிர்,ஆதரவற்ற விதவை,மாற்றுதிறனாளி(பெண்),திருமணமாகாத 35 வயதுக்கு மேற்பட்ட மகளிர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மகளிர் மற்றும் திருநங்கையினருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்

மனுக்கள் 22ம்தேதிமுதல் பிப்ரவரி மாதம் 5 ம்தேதி வரை வழங்கப்படும் ஊராட்சி ஒன்றியங்கள பேரூராட்சநகராட்சி அலுவலகங்களிலும், திருச்சி உட்பட மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும் வழங்கப்படும் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் 05.02.2018 வரை சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளப்படும். பயனாளிகள் தங்களுக்கு விருப்பமுள்ள 125சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனத்தினை சொந்த நிதியிலிருந்து அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுபாட்டிலுள்ள வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வசதி பெற்றும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

பிறந்த தேதிக்கான சான்றிதழ் இருப்பிடச்சான்றிதழ், (வாக்காளர் அடையாள அட்டை இருசக்கர வாகன உரிமம் ஆதார் அடையாள அட்டையின் நகல்)உரிய அலுவலரால் வழங்கப்பட்ட இருச்சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் - நகல். வேலை வழங்கும் அலுவலரால்/நிறுவனத்தால் வழங்கப்படும் வருமான சான்றிதழ் அல்லது சுய வருமான சான்றிதழ்.நிறுவனத்தலைவர்/ சங்கங்கள் மூலம் ஊதியம் பெறுபவர்களின் ஊதியச்சான்றிதழ். ஆதார் அடையாள அட்டை. எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுள்ளவர்களின் சான்றிதழ்கள்கடவுச்சீட்டு அளவுள்ள புகைபடம். சிறப்பு தகுதி பெற விரும்புவோர் அதற்குரிய சான்றிதழ் சாதி சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர்) உரிய அலுவலரால் வழங்கப்பட்ட மாற்றுதிறனாளி அடையாள அட்டைஇருசக்கர வாகனத்தின் விலைப்புள்ளி..ஆகியவற்றிற்கான பதில்களை விண்ணப்பதாரர்கள் வழங்க வேண்டுமென அவர்  கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து