முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலிவுட் நட்சத்திரங்களுடன் செல்பி எடுத்த இஸ்ரேல் பிரதமர்

சனிக்கிழமை, 20 ஜனவரி 2018      சினிமா
Image Unavailable

மும்பை, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களுடன் இரவு விருந்தில் பங்கேற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்களுடன் உற்சாகமாக செல்பி எடுத்துக் கொண்டார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவில் 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து பேசிய அவர், நாட்டின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். அந்த வகையில், மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்களுடன் இரவு விருந்து நிகழ்ச்சியில் தனது மனைவி சாராவுடன் பெஞ்சமின் நெதன்யாகு கலந்துகொண்டார். நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், விவேக் ஒபராய், சாரா அலி கான், இயக்குநர்கள் கரன் ஜோகார், சுபாஷ் காய், இம்தியாஸ் அலி உள்ளிட்டோர் இந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அவர்களுடன் உற்சாகமாக உரையாடிய பெஞ்சமின், தாம் பாலிவுட் திரைப்படங்களை மிகவும் நேசிப்பதாக தெரிவித்தார். தான் மட்டுமின்றி ஒட்டுமொத்த இஸ்ரேல் மக்களும் பாலிவுட்டை நேசிப்பதாகவும் அப்போது அவர் கூறினார். இதையடுத்து, பாலிவுட் நட்சந்திரங்களுடன் தமது மனைவி சாராவுடன் நெதன்யாகு செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து