முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட் வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்கும் : கட்காரி

சனிக்கிழமை, 20 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

மும்பை, மத்திய பட்ஜெட்டில் வேளாண்மை, அடிப்படைக் கட்டமைப்புக்கு முன்னுரிமை தரும் வகையில் இருக்கும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டுக்கான கவுண்ட் டவுன் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடந்தது. அதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசியதாவது, 

நம் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதைப் பார்த்து, நம் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் நம் நாட்டில் முதலீடு செய்து வருகின்றனர்.  -- மத்திய அமைச்சர் கட்காரி

பண மதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவை நாட்டின் சூழலை மாற்றிவிட்டன. மத்திய அரசின் நேரடி வருவாய் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 18 சதவீதம் உயர்ந்துள்ளது. அரசு கடன் பெறும் தொகையையும், ரூ.30 ஆயிரம் கோடிக்குள் குறைத்து, நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்துள்ளது.

இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டை, வேளாண்மை, அடிப்படை கட்டமைப்புக்கு அதிக முன்னுரிமை அளித்து நிதி அமைச்சர் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கிறேன். நம் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதைப் பார்த்து, நம் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் நம் நாட்டில் முதலீடு செய்து வருகின்றனர்.

ரூ. 8 லட்சம் கோடி முதலீட்டில் செய்யப்பட்டுவரும் சாலை, கப்பல், துறைமுகம், உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்து ஆகிய திட்டங்கள் வரும் மார்ச் மாதத்துக்குள் முடியும். சாலை திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கீடும் செய்யும் தொகை இந்த நிதியாண்டில் ரூ.1.30 லட்சம் கோடியாக அதிகரிக்கும். இதைஅடுத்த நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்த்துவோம். நாள் ஒன்றுக்கு 28 கி.மீ. சாலை சராசரியாக அமைக்கப்பட்டு வருகிறது, இது அடுத்த ஆண்டு 40 கி.மீ. என்ற அளவில் உயர்த்தப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து