முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் தர போட்டியில் ஒரு ஓவரில் 37 ரன்கள் அடித்து தென் ஆப்பிரிக்க வீரர் சாதனை

சனிக்கிழமை, 20 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

கேப்டவுன் : முதல் தர போட்டியில் ஒரு ஓவரில் 37 ரன்கள் அடித்து தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஜேபி டுமினி புதிய சாதனை படைத்துள்ளார்.

கோப்ராஸ் அணி...

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஜேபி டுமினி, ஒரு ஓவரில்  37 ரன்கள் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் முதல் தர போட்டியில் கேக் கோப்ராஸ் அணிக்காக டுமினி விளையாடி வருகிறார். இதில், நைட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 240 ரன்களை இலக்க கொண்டு கேப் கோப்ராஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது.

புதிய சாதனை...

கோப்ராஸ் அணிக்காக  களம் இறங்கிய டுமினி ஆட்டத்தின் 36-வது ஓவரில், இடது கை  பந்து  வீச்சாளர் எடி லெயி பந்து வீச்சை புரட்டி எடுத்தார். முதல் நான்கு பந்துகளை சிக்சருக்கு விளாசினார். ஐந்தாவது பந்தில்  இரண்டு ரன்கள் ஓடி எடுத்தார். ஆறாவது பந்தில் பவுண்டரி விளாசினார். இந்த பந்தை நோபாலாக பந்து வீச்சாளர் வீசி விட்டார். இதையடுத்து மீண்டும் 6 வது பந்து வீசப்பட்ட நிலையில், அதையும் சிக்சருக்கு விளாசி தள்ளினார். இதன் மூலம் ஒரே ஓவரில் 37 ரன்கள் அடித்து உள்ளூர் போட்டி வரலாற்றில் டுமினி புதிய சாதனை படைத்துள்ளார்.  டுமினி மொத்தமாக 37 பந்துகளில் 70 ரன்கள் அடித்து கோப்ராஸ் அணியின் வெற்றிக்கு உதவினார்.

கிடைத்துவிடாது...

இதுபற்றி டுமினி கூறும்போது, ’அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 35 ரன்கள் தேவை என்பதை ஸ்கோர்போர்டில் பார்த்தேன். அப்போது, எடி வீசிய முதல் இரண்டு பந்துகளை சிக்சருக்கு விளாசினேன். எளிதாக இருந்ததால் தொடர்ந்து அவர் பந்தை அடித்து ஆடினேன். அதனால் இந்த ரன்கள் கிடைத்தது. இந்த மாதிரியான வாய்ப்பு எப்போதும் கிடைத்துவிடாது’ என்றார்.

டுமினியின்  விளாசல்

முதல் பந்து - சிக்சர்.

2-வது பந்து - சிக்சர்.

3-வது பந்து - சிக்சர்.

4-வது பந்து - சிக்சர்.

5-வது பந்து - 2 ரன்கள்.

6-வது பந்து - பவுண்டரி (நோ பால்)

6-வது பந்து (மீண்டும்)- சிக்சர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து