முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஹெலப், பிளிஸ்கோவா 4-வது சுற்றுக்கு தகுதி

சனிக்கிழமை, 20 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஹெலப், பிளிஸ்கோவா 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஹெலப் வெற்றி...

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப் (ருமேனியா) 3-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த லாரன் டேவிசை எதிர்கொண்டார். இதில் ஹெலப் 4-6, 6-4, 15-13 என்ற கணக்கில் போராடி வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

கெய்ஸ் வெற்றி...

மற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசுவை சேர்ந்த கரோலினா பிளிஸ்கோவா- லுசி ‌ஷபரோவா மோதினார்கள். இதில் 6-ம் நிலை வீராங்கனையான பிளிஸ்கோவா 7-6 (8-6), 7-5 என்ற நேர்செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்னொரு 3-வது சுற்று ஆட்டத்தில் மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) வெற்றி பெற்றார். அவர் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ருமேனியாவை சேர்ந்த போக்டனை வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து