முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      கடலூர்
Image Unavailable

கடலூர் திருப்பாதிரிபுலியூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான தமிழக பள்ளி கலைத் திருவிழாவினை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே,   தலைமையில்  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்  துவக்கி வைத்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை  வழங்கினார்.இவ்விழாவில்  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்  தெரிவித்ததாவது

பள்ளி கலைத் திருவிழா

 இந்நிகழ்வு ஒரு தலைசிறந்த நிகழ்வாகும். மாணவ மாணவிகளுக்கு மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  பெண் கல்வியினை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி அதில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், விலையில்லா மிதிவண்டிகள், சீருடைகள், பல்வேறு உபகரணங்கள் போன்ற அனைத்தையும் கல்வியின் முன்னேற்றத்திற்காகவே வழங்கினார்கள். அதன்பேரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்றைய தினம் வருவாய் மாவட்ட அளவிலான தமிழக பள்ளி கலைத் திருவிழா சிறப்பான முனையில் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் பல்வேறு கலைகளில் தங்களின் திறமையினை வெளிப்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தினார்கள். அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்துக்கின்றேன்.  இந்நிகழ்ச்சியில் கல்வி மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட சுமார் 500-க்கு மேற்பட்ட மாணவ  மாணவிகள் 91 வகையான போட்டிகளில் கலந்து கொண்டனர். வருவாய் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் தமிழக பள்ளிக் கலைத் திருவிழாவில் பங்கேற்க உள்ளனர். தமிழகம் தொன்று தொட்டு கலைகளை போற்றி வருவதை தமிழ் இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிகிறோம்.   தமிழ்மொழியை இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழாக்கி போற்றியவர்கள் தமிழ் மக்கள் ஒரு மாணவனின் மேம்பாடு என்பது கல்வி சார்நிலையில் மட்டுமல்லாது கலை, கலாச்சாரம், விளையாட்டு எனப் பல்வேறு கல்வி இணைச் செயல்பாடுகளிலும் அமைதல் வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தமிழக பள்ளிக் கல்வித் துறை ‘தமிழக பள்ளிக் கலைத்திருவிழா”  என்ற திட்டத்தினை தொடங்கியுள்ளது.  தமிழக பள்ளிக் கலைத் திருவிழாவில் மொழி ஆற்றல், பாரம்பரியம், செவ்வியல், நவீனம், ஆன்மீகம், கலாச்சாரம், கிராமியம், நாட்டுப்புறம் ஆகிய பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் முதல் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்  பங்குபெற்று உள்ளனர். இப்போட்டிகள் பள்ளி, ஒன்றியம், கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்டம் ஆகிய நிலைகளில் நடத்தப்பட்டு வருகிறது.  வருவாய் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறுகின்றனர். போட்டிகளில் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி வெற்றி பெறுபவர்களுக்கு அங்கீகாரமும் பாராட்டும் பரிசும் அளிக்கப்படுகிறது.                 தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் 14 வகையான நலத்திட்டங்களை மாணவர்களின் கல்வித் தரம் உயர செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளில்  1,29,874 மாணவ மாணவிகளுக்கு ரூ.208  கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளும், 1,30,553  மாணவ மாணவிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான  விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கப்பட்டு உள்ளது.  மாணவர்கள்   கல்வியில் முழுக் கவனம் செலுத்தி உயர் மதிப்பெண்களுடன் தேர்வில் வெற்றி பெற்று எதிர்கால வாழ்க்கை வளமாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவ மாணவிகளுக்கு  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்  பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் கடலூர் முதன்மை கல்வி அலுவலர் முனைவர் அ.இராஜேந்திரன்  வரவேற்று பேசினார். இவ்விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் ந.இளங்கோ (விருத்தாச்சலம்), மாவட்ட தொடக்க  கல்வி அலுவலர் ஆஷாகிறிஸ்டி, வடலூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் அன்பழகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், கடலூர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் க.கோமதி, உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ப.சுந்தரமூர்த்தி, திருப்பாதிரிபுலியூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அருட்தந்தை.வி.ஆக்னல் அடிகளார், முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர்கள் இரா.முருகன் (மேல்நிலை), க.தேவநாதன் (இடைநிலை) மற்றும் பள்ளி கல்வி ஆய்வாளர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியைகள் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் கோ.சுப்ரமணியன்  நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து