ஊத்தங்கரை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக நேரடி நெல் கொள்முதல நிலையம்: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      கிருஷ்ணகிரி
2

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக சார்பில் வேளாண்மை விற்பனை மைய வளாகத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி இன்று (21.01.2018) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் சி.கதிரவன் . தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் .மனோரஞ்சிதம்நாகராஜ், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொள்முதல் நிலையம்

நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து அமைச்சர் பேசும் பொழுது:மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் அரசு விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. அதனடிப்படையில் விவசாயிகளின் கோரிக்கைகிணங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் வேளாண் விற்பனை மைய வளாகத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உத்தரவிட்டதின் அடிப்படையில் உடனடியாக இந்த மையம் துவக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது நெல் உற்பத்தியை இம் மையத்தில் நேரடியாக விற்பனை செய்யலாம். சன்ன ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.1660 - ம், பொது ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1600 விலை நிர்ணயம் செய்துள்ளது. வெளியிடங்களில் இடை தரகர்கள் கூட்டாக சேர்ந்து விசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்குவது தவிர்க்கப்பட்டு, இந்த மையத்தில் நல்ல விலைக்கு விற்பனை செய்ய விவசாயிகள் முன்வரவேண்டும்.

பொருளாதார உயர்வு

 

விவசாயிகளின் நலன் கருதி தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க ஏரிகளில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரசாயன உரங்கள் பயன்படுத்தி மண்ணின் தரம் குறைத்த நிலையில் தற்போது ஏரிகளிலிருந்து வண்டல் மண் எடுத்து விவசாய பயன்பாட்டின் மூலம் அதிக விளைச்சல் அதிகரிக்க செய்கிறது. ஆகையினால் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிககள் நன்கு பயன்படுத்தி தங்களுடைய பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.கணேசன், உதவி இயக்குநர் ராஜேந்திரன், போது மாநில நிள வள வங்கி தலைவர் சாகுல்அமீது, தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு தலைவர் எஸ்.தென்னரசு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தேவேந்திரன், நகர வீட்டு வசதி சங்க தலைவர் சிவானந்தம், கிருஷ்ணன், சுப்பிரமணி, சேட்டு, விவசாயிகள் சங்க தலைவர் ராமகவுண்டர், வட்டாட்சியர் சுப்பிரமணி, மற்றும் விவசாயிகள் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சக்திசரண் வரவேற்புரையும், துணை மண்டல மேலாளர் கே.பழனி நன்றி தெரிவித்தார்.

 

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து