முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாள் தொடரை வென்றது இங்கிலாந்து: சொந்த மண்ணில் ஆஸி.க்கு நிகழ்ந்த சோகம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

சிட்னி : சிட்னி நகரில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி.
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னணி பெற்று தொடரை தனதாக்கியுள்ளது.

பாரம்பரியம் கொண்ட ஆஷஸ் கோப்பைத் தொடரை ஆஸ்திரேலிய அணியிடம் பறிகொடுத்த இங்கிலாந்து அந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் ஒரு நாள் தொடரைக் வென்றுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இங்கிலாந்து பறிகொடுத்த நிலையில், ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

சிட்னி நகரில் 3-வது ஒருநாள் போட்டி நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான ராய்(19), பேர்ஸ்டோ(39), ஹேல்ஸ்(1), ஜோய் ரூட்(27) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 189 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திண்டாடியது.

ஆனால், அபாரமாக ஆடிய ஜோஸ் பட்லர் அணியைச் சரிவில் இருந்து மீட்டார். இவர் 83 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். இவருக்கு உறுதுணையாக பேட் செய்த கிறிஸ் வோக்ஸ் 36 பந்துகளில் 53 ரன்கள் சேர்தது ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரின் கூட்டணியும் 113 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக ஹேசல்வுட் 2விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து, 303 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் மட்டுமே சேர்த்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சு, துடிப்பான பீல்டிங் முன் ஆஸ்திரேலியாவின் ரன் வேட்டை எடுபடவில்லை.
அந்தஅணியில் ஆரோன் பின்ஞ்(62),ஸ்மித்(45), மார்ஷ்(55), ஸ்டோய்னிஸ்(56) ஆகியோர் அரை சதம் அடித்தும் இலக்கை எட்ட முடியவில்லை. பைனி 31 ரன்களுடனும் , கம்மின்ஸ் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ், உட், ராசித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக ஜோஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து