முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினி அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார் - இந்தி நடிகர் நானா படேகர் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      சினிமா
Image Unavailable

மும்பை :  ரஜினி காந்திற்கு அரசியல் சரப்பட்டு வராது என்றும் அதற்கு அவர் ஒத்துவர மாட்டார் என பிரபல இந்தி நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார்.

இந்தி திரையுலகில் பிரபலமான நடிகர் நானா படேகர். உணர்வுபூர்வமான நடிகர் என்று பெயர் பெற்ற நானா படேகர் நிஜ வாழ்க்கையில் தனது சம்பாதியத்தை விவசாயிகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்காக வழங்கி வருகிறார். அரசியல், சமூகம் குறித்து தனது பளிச் கருத்துகளை வெளியிட்டு வரும் நானா தற்போது ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது காலா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நானா படேகர் நடித்து வரும் நிலையில், ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அவரிடம் ஆலோசித்ததாகவும் நானா படேகர் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்றும், அதில் அவர் தீவிரமாக இறங்கினால் இதுநாள் வரை சம்பாதித்த பெயர் புகழ் அனைத்தையும் இழந்து விடுவார் என்று நானா படேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியலில் ஜெயிப்பதற்கு என்று சில விரும்பதகாத தகுதிகள் வேண்டும் என்றும், நல்ல குணம் படைத்த ரஜினி அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்றும் படேகர் தெரிவித்துள்ளார். அரசியலில் மக்களுக்காக போராட வேண்டும், இல்லையென்றால் மக்கள் நமக்கு எதிராக போராட தொடங்கி விடுவார்கள் என்று கூறிய படேகர், இந்த கருத்தை ரஜினியிடமே தாம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து