முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காபி விலை வீழ்ச்சி: விவசாயிகள் மகிழ்ச்சி!

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தின் மொத்த விவசாயத்தில் ஏலக்காய், காபி, மிளகு, ரப்பர் ஆகியவை 50% பங்கு வகிக்கிறது. இவற்றில் 15% காப்பி உற்பத்தி செய்யப்படுகிறது. காப்பியை பொறுத்தவரை “ரோபஸ்ட்ரா”, “அரேபிக்கா” என இரண்டு வகைகள் பயிரிடப்படுகிறது. ஆண்டு பயிரான காபி, ஜனவரி மாதம் விளைச்சலுக்கு வர ஆரம்பிக்கிறது. அந்தவகையில் தற்போது காபி செடியில் இருந்து பழங்கள் பறிக்கப்பட்டு அவை உலர்த்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சராசரியாக ஏக்கருக்கு 650 கிலோ கிடைக்கும் காபி, இந்த ஆண்டு 300 முதல் 350 கிலோ வரை அதிகரித்திருக்கிறது. எனினும், அதிக விளைச்சலால் சராசரியாக 250 ரூபாய் வரை விலை போக வேண்டிய ஒரு கிலோ ரோபஸ்ட்ரா காபி 85 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையிலும், 350 ரூபாய் வரை விற்பனையாக வேண்டிய அரேபிக்கா காபி 145 ரூபாய் முதல் 195 ரூபாய் வரையில் மட்டுமே விலை போகிறது. ஆனாலும் அதிக உற்பத்தி, விலை வீழ்ச்சியை ஈடுகட்டும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து