முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதிகள் விவகாரத்தில் அரசு தலையிடாது: பிரதமர்

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இடையே நிலவும் கருத்து வேறுபாடு தொடர்பான விவகாரத்தில் அரசும், அரசியல் கட்சிகளும் தலையிடக் கூடாது என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட் நான்கு மூத்த நீதிபதிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து மறைமுகமாக குற்றம் சாட்டினர். நீதிபதிகளின் இந்த மோதல் போக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இடையே கருத்து வேறுபாடு தொடர்பான விவகாரத்தில் அரசும், அரசியல் கட்சிகளும் தலையிடக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், நான் இந்த விவகாரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அரசும் கண்டிப்பாக இதில் தலையிடக் கூடாது. அரசியல் கட்சிகளும் இதில் தலையிடுதல் கூடாது. நமது நீதித்துறைக்கு என சிறப்பான கடந்த காலம் உள்ளது. நமது நீதிபதிகள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அவர்களனைவரும் ஒன்றாகக் கூடியமர்ந்து பேசி இந்த பிச்னைக்கு ஒரு தீர்வு காண்பார்கள். எனக்கு நமது நீதியமைப்பின் மீது நம்பிக்கையுள்ளது. அவர்கள் கண்டிப்பாக ஒரு தீர்வை எட்டுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து