முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை பாவனா திருமணம் - தயாரி்ப்பாளரை மணந்தார்

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      சினிமா
Image Unavailable

திருவனந்தபுரம் : பிரபல நடிகை பாவனா, கன்னட சினிமா தயாரிப்பாளரை மணந்தார்.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் பிரபல நடிகை பாவனா. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமான பாவனா தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இவர் கடந்த 2012ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ரோமியோ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்போது அந்த படத்தின் தயாரிப்பாளர் நவீனுடன் பாவனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மாறியது. கடந்த 5 வருடங்களாக அவர்கள் காதலித்து வந்தனர். முதலில் தங்கள் காதலை மறுத்த  இவர்கள் பிறகு அதை ஒத்துக் கொண்டனர். இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஆண்டு பாவனா, நவீன் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக நடந்தது. பாவனாவின் தந்தை மறைவு போன்ற காரணங்களால் தள்ளிப் போனது திருமணம். அதை தொடர்ந்து இரு வீட்டாரும் கலந்து பேசி நேற்று திருமணம் நடத்துவது என முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று திருச்சூரில் பாவனா வீட்டில் அவருக்கு மெகந்தி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பாவனாவின் நெருங்கிய தோழிகள் இதில் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து திருச்சூர் திருவம்பாடி ஆலயத்தில் நேற்று காலை நடிகை பாவனா, நவீன்  திருமணம் நடைபெற்றது. குடும்ப உறவினர்கள், முக்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் முடிந்ததும் ஜவகர்லால் கண்வென்சன் சென்டரில் விருந்து மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து