முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி. ஓபன் 4-வது சுற்றில் ஜோகோவிக், தியம் அவுட்: காலிறுதியில் பெடரர், பெர்டிச் மோதல்

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு ரோஜர் பெடரர், பெர்டிச் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஜோகோவிக் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

நடால் முன்னேற்றம்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவிற்கான காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற நான்கு போட்டிகள் முடிவில் ரபெல் நடால் (ஸ்பெயின்), சிலிச் (குரோஷியா), எட்மண்ட் (இங்கிலாந்து), டிமிட்ரோவ் (பல்கேரியா) ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினார்கள்.

நான்கு போட்டிகள்

நேற்று நான்கு போட்டிகள் நடைபெற்றன, ஒரு போட்டியில் 17-ம் வீரரான செர்பியாவின் ஜோகோவிச், கொரியாவின் ஹியியோன் சங்கை எதிர்கொண்டார். தரநிலை பெறாத கொரிய வீரர் சங், ஜோகோவிச்சுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். ஜோகோவிச்சால் சங் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 3-0 என நேர்செட் கணக்கில் சங் வெற்றி பெற்றார். சங் 7(7) - 6(4), 7-4, 7(7) -6(3) என ஜோகோவிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

டொமினிக் தியம்...

மற்றொரு ஆட்டத்தில் 5-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் அமெரிக்காவின் டெனிஸ் சான்ட்கிரென்-ஐ எதிர்கொண்டார். இந்த ஆட்டம் நீண்ட நேரம் சென்றது. ஐந்து செட் வரை நீண்டதில், தியம் 2-3 எனத் தோல்வியடைந்து வெளியேறினார். முதல் செட்டை 2-6 எனவும், 3-வது செட்டை 6(4) - 7(7) எனவும், கடைசி செட்டை 3-6 எனவும் இழந்தார். 2-வது செட்டை 6-4 எனவும், 4-வது செட்டை 7(9) - 6(7) எனவும் கைப்பற்றினார்.

பெர்டிச் வெற்றி ...

3-வது ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர், ஹங்கேரியின் மார்டன் புக்சோவிக்ஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் ரோஜர் பெடரர் 6-4, 7(7) - 6(3), 6-2 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். கடைசி ஆட்டத்தில் 19-ம் நிலை வீரரான செக் குடியரசின் தாமஸ் பெர்டிச், 25-ம் நிலை வீரரான இத்தாலியின் பேபியோ போக்னினியை எதிர்கொண்டார். இதில் பெர்டிச் 6-1, 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் டிமிட்ரோவ் - எட்மண்ட், ரபெல் நடால் - சிலிக் பலப்பரீ்ட்சை நடத்துகிறார்கள். நாளை ரோஜர் பெடரர் - பெர்டிச், டெனிஸ் சான்ட்கிரென் - சங் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து