முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அய்யம்பாளையத்தில் தென்னை விவசாயிகள் பங்கேற்ற நீரா பானம் பற்றிய கருத்தரங்கம்

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு -திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனம் சார்பில் நீரா பானம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் தேனி தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவன தலைவர் பன்னீர்செல்வம் பேசியதாவது, தென்னை கற்பக விருட்சம் போன்றதா-கும். தற்போது தேங்காய்கள் வரத்து குறைவு மற்றும் வறட்சி காரணமாக கூடுதலாக விற்கின்றது. மற்ற நாட்களில் வரத்து கூடிய சமயங்களில் கொப்பரை மற்றும் தேங்காய் கட்டுபடியாகாத விலையில் விற்கின்றது. இதனால் தென்னை விவசாயிகள் நிரந்தர வருமானம் இல்லாத சூழல் உள்ளது. ஆனால் நீரா பானம் தென்னை விவசாயிகளுக்கு நிரந்தரமான வருமானம் தரக்கூடியதாகும். இது ஆரோக்கியமானது, சிறுநீரக கோளறுகள், மஞ்சள்காமாலை, செரிமான கோளாறுகளுக்கு சிறந்தாகும். மேலும் கர்பிணிபெண்களுக்கு நல்ல பலன் தரும் பானமாகும். இந்த நீரா பானம் எடுக்க 7 வயது முதல் 25 வயதுள்ள தென்னை மரங்கள் மட்டுமே தகுதியானதாகும். ஒருவிவசாயி 100 மரம் வைத்திருந்தால் 5 மரங்களில் நீரா எடுக்க அனுமதியுள்ளது. பழைய முறையான கலையங்களை மரத்தில் கட்டி வைத்து எடுக்காமல் நவீனமுறையில் தென்னை மரத்திற்கு கீழே கேன்களை வைத்து நீரா எடுக்கலாம்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் சாக்லேட், பிஸ்கட், சக்கரை போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் இதன் மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்றது. ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் மூலமாக 6 மாதத்திற்கு செலவு போக விவசாயிக்கு கிடைக்கும் நிகர லாபம் 800 ரூபாயாகும். இதே 6 மாதத்தில் செலவின்றி நீரா எடுத்தால் அந்த விவசாயிக்கு நிகரலாபம் 10 ஆயிரம் வரை கிடைக்கும். தென்னை மர பாலையை சரி செய்து நீராவை எடுக்க வைத்த 13 நாளிலிருந்து தொடர்ந்து 45 நாட்கள் நீரா வரும். இந்த பானத்தை மழை,பனி என எல்லா நாட்களிலும் உற்பத்தி செய்யலாம் என்றார்.
இந்த கருத்தரங்கில் வத்தலக்குண்டு தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவன தலைவர் முருகேசன், அய்யம்பாளையம் தென்னை விவசாய சங்க தலைவர் காசி, மற்றும் பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, வாடிப்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நீரா பானம் எடுக்க அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் வத்தலக்குண்டு தென்னை விவசாயி தவமணி நன்ற¤ கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து