முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் பசுமைக்குடில் சாகுபடியில் தொழில் நுட்பம் குறித்த கருத்தரங்கு

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      தேனி
Image Unavailable

தேனி.- தேனி மாவட்டம், அன்னஞ்சி விலக்கில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான பசுமைக்குடில் சாகுபடியில் தொழில் நுட்பம் குறித்த கருத்தரங்கு  மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   தலைமையில் நடைபெற்றது.
 
 கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசு வேளாண் பொருட்களின் உற்பத்தியை பெருக்கிட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழக அரசின் இரண்டாம் பசுமை புரட்சியின் குறிக்கோளான வேளாண் பொருட்களின் உற்பத்தியை மும்மடங்காகவும், வருமானத்தை இரண்டு மடங்காகவும் உயர்த்துவதற்கு பசுமை குடில் சாகுபடியில் தொழில் நுட்பம் மிக உறுதுணையாக இருப்பதினை கருத்தில் கொண்டு தமிழக அரசு பசுமை குடில் அமைத்திட அதிக அளவில் மானியத்தொகை ஓதுக்கீடு செய்து வழங்கி வருகிறது. பசுமைக்குடில் மூலம் பயிர்களை மழை, பனி மற்றும் அதிக காற்றில் இருந்தும், பறவை மற்றும் பூச்சிகளில் இருந்தும் பாதுகாக்கப்பட்டு சாகுபடி செய்வதற்கு ஏதுவாகிறது.
 ஆண்டு முழுவதும் சாகுபடி, மிக அதிப்படியான மகசூல், குறைந்த நீர் மற்றும் உர தேவை குறைவு, குறைந்த பரப்பளவில் தீவிர சாகுபடி செய்வதால் நிர்வகிப்பது போன்று பல்வேறு பயன்கள் பசுமைக்குடில் மூலம் கிடைக்கப்பெறுகிறது. எனவே, பசுமை குடில் சாகுபடி தொழில் நுட்பம் இன்றைய விஞ்ஞான காலகட்டத்திற்கு மிகவும் அவசியமானதாகும். பசுமைக்குடில் அமைப்பதற்கு தமிழக அரசு தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் மூலம் 1993 வருடத்திலிருந்து பசுமைக்குடில் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுவருகிறது. தேசிய தேட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் மற்றும் மானாவாரி அபிவிருத்தி திட்டங்களின் கீழ் 1000 ச.மீ பசுமைக்குடில் அமைத்திட ரூ.9,35,000ஃ- செலவாகும் என்றால் இதில் 50 சதவீதம் ரூ.4,67,500ஃ- அரசு மானியமாக வழங்கி வருகிறது.
 நமது மாவட்டத்தில் 86,000 சதுர மீட்டர் பரப்பில் பசுமை குடில் சாகுபடி நடைபெற்று வருகிறது. அதாவது 8.6 ஹெட்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் மொத்த சாகுபடி பரப்பு 1,12,555 ஹெக்டரில், தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி 51,559 ஹெக்டரிலும், காய்கறி பயிர்களில் சராசரி பரப்பளவு 14,221 ஹெக்டரிலும், மலர்கள் 409 ஹெக்டரிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போதுள்ள 8.6 ஹெக்டர் பரப்பளவில் இருந்து 100 ஹெக்டர் பரப்பளவில் பசுமை குடில் சாகுபடியை அதிகரிப்பது சாத்தியமானது. எனவே, விவசாயிகள் பசுமைக்குடில் சாகுபடியில் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி அதிக வருவாய் ஈட்டி வாழ்வில் வளம்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   தெரிவித்தார்.
  இக்கருத்தரங்கில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர்  முகம்மது அப்துல் நசீர்  பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர்  சாமிநாதன்  தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்  கிஷோர்குமார்  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்)  சந்திரசேகரன்  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல்  தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்  சீனிவாசன் அவர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து