முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவதானபட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் திருவிழா முகூர்த்தகால் நடும்விழா

புதன்கிழமை, 24 ஜனவரி 2018      தேனி
Image Unavailable

 தேனி - தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தேவதானபட்டி மூங்கிலணை காமாட்சியம்மன ;கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மஹாசிவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.  குல தெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் காமாட்சியம்மனை குல தெய்வமாக வழிபடுவது ஐதீகம். அதே போன்று இக்கோவிலில் அடைத்த கதவுக்கே; பூஜைகள் நடைபெறும். உடைக்காத தேங்காய், உரிக்காத வாழைப்பழம் இந்த கோவிலில் நெய்வேத்தியமாக வைக்கப்படும். இந்த கோவிலில் பிரார்த்தனைக்காக ஊற்றப்படும் நெய் வருடம் முழுவதும் கெடாமல் இருப்பது இக்கோவிலின் சிறப்பாகும். இச்சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் இந்தாண்டு மாசி மஹாசிவராத்திரி திருவிழாவிற்கான கம்பம் நடுதல் மற்றும் கொடியேற்றும் விழா நேற்று நடைபெற்றது.  இதற்காக கொடிமரத்திற்கு சிறப்புபூஜைகள் செய்யப்பட்டு முகூர்த்தகால் நடப்பட்டது. அதன் பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இத்திருவிழா வருகின்ற 13.02.2018 அன்று தொடங்கி 17.02.2018 வரை நடைபெறும். மறுபள்ளயம் எனப்படும் மறுபூஜை விழா 20.02.2018 தேதி நடைபெற உள்ளது. திருவிழா காலங்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் நடைபெற்று வருகின்றன. இக்கம்பம் நடுதல் விழாவில் கோவில் செயல் அலுவலர் சந்திரசேகர், பரம்பரை நிர்வாக அறங்காவலர் தனராஜ்பாண்டியன், பரம்பரை அறங்காவலர் கனகராஜ்பாண்டியன், கோவில் பணியாளர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து