முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு மிதி வண்டிகள் பேரணி தேனி கலெக்டர் துவக்கி வைத்தார்.

புதன்கிழமை, 24 ஜனவரி 2018      தேனி
Image Unavailable

தேனி- தேனி ஆர்.சி உயர் நிலைப்பள்ளியில், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு மிதி வண்டிகள் பேரணியை   மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.
     மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம்; ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி-25-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவதன் நோக்கம் இந்திய தேர்தல் ஆணையத்தின் சுலபபதிவு, சுலபதிருத்தம் போன்ற வாசகங்களின் அடிப்படையில், பொதுமக்களை புதிய வாக்காளர்களாக சேர்ப்பதற்கும், வாக்களிப்பதன் அவசியம், வாக்குகளின் மதிப்பு ஆகியவற்றை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவற்காகவே கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் மூலம் மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் தங்களது குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து வாக்காளர் பட்டியல்களில் தகுதியுள்ள அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் பல்வேறு அடிப்படை உரிமைகளுக்கு வழிவகை செய்யப்படுகிறது. மேலும், மாவட்டத்திலுள்ள ஐந்து வட்டங்களில் பல்வேறு துறைகளின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்  வெங்கடாசலம், தெரிவித்தார்.
 இப்பேரணி ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் துவங்கப்பட்டு பி.சி.பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்றது. பேரணியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் கடமை மற்றும் உரிமை குறித்து முழக்கமிட்டவாறு சென்றார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து