முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல்வியிலிருந்து கற்றுக் கொண்டு,வளர்ந்துகொண்டே இருக்க வேண்டும் - விராட் கோலி

புதன்கிழமை, 24 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

தோல்வியிலிருந்து கற்றுக் கொண்டு, மேன்மேலும் வளர்ந்துகொண்டே இருக்க வேண்டும்' என விராட் கோலி கூறினார்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரை இழந்து திணறிவருகிறது. நேற்று மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்க்கில் தொடங்கியது. இந்தப் போட்டியிலாவது இந்திய அணி ஆறுதல் வெற்றிபெற்று, தன் கவுரவத்தை நிலைநாட்டுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கும் நிலையில், போட்டிக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார், இந்திய கேப்டன் விராட் கோலி.

கற்றல் என்பது...

அப்போது, டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கோலி, `ஒவ்வொரு நாளும் கற்றல்தான். நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதலில் செய்த தவறுகளிலிருந்து கற்காமல் இருந்திருந்தால், நான் இந்த இடத்துக்கு வந்திருக்க மாட்டேன். எனவே, கற்றல் என்பது தினம் தினம் நடக்கும் ஒரு விஷயம். தவறுகளைச் சரிசெய்துகொண்டு முன்னோக்கிச் சென்றுகொண்டே இருக்க வேண்டும்.

மிகச் சாதாரணம்

நான் எப்போதும் கற்பதை நிறுத்திக்கொள்ளவே இல்லை. எப்போதும் கற்பதை நிறுத்திக்கொள்ளவும் மாட்டேன். வெற்றியும் தோல்வியும் ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் மிகச் சாதாரணம். அதை நான் புரிந்துகொள்கிறேன். தோல்வியிலிருந்து கற்றுக் கொண்டு, மேன்மேலும் வளர்ந்துகொண்டே இருக்க வேண்டும்' என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து