முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான்கு நாடுகள் ஹாக்கி 2-வது சுற்று: பெல்ஜியத்தை வீழ்த்தியது இந்தியா

வியாழக்கிழமை, 25 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் நடைபெற்று வரும் நான்கு நாடுகள் ஹாக்கி தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்தியா 5-4 என்ற கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது.

இந்தியா, நியூசிலாந்து, பெல்ஜியம், ஜப்பான் அணிகளுக்கு இடையிலான நான்கு நாடுகள் ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் ஜப்பான் அணியை இந்தியா வீழ்த்தியிருந்தது. பெல்ஜியத்திடம் தோல்வியை சந்தித்திருந்தது. இரண்டாவது சுற்றில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது.

ஆட்டம் தொடங்கிய 4 வது நிமிடத்தில் இந்தியாவின் ருபிந்தர் கோல் அடித்தார். லலித் உதய் மற்றும் ஹர்மன்பீரித் சிங் தலா இரண்டு கோல்கள் அடித்தனர். ஆட்டத்தின் 59 வது நிமிடத்தில் ஜந்தாவது கோலை தில்ப்ரீத் சிங் அடித்தார். இதன் மூலம் இந்தியா 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து