முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு: அரையிறுதியில் போபண்ணா - பாபோஸ் ஜோடி

வியாழக்கிழமை, 25 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ஹங்கேரியின் திமியா பாபோஸ் ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

காலிறுதி சுற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. கலப்பு இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ஹங்கேரியின் திமியா பாபோஸ் ஜோடி, கொலம்பியாவின் ஜூவான் செபஸ்டின் கபல் - அமெரிக்காவின் அபிகெய்ல் ஸ்பியர்ஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது.

எளிதாக வெற்றி...

இப்போட்டியின் முதல் செட்டை போபண்ணா - பாபோஸ் ஜோடி 6-4 என எளிதாக கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் கபல் - ஸ்பியர்ஸ் ஜோடி, போபண்ணா ஜோடிக்கு ஈடுகொடுத்து விளையாடியது. இறுதியில் போபண்ணா - பாபோஸ் ஜோடி இரண்டாவது செட்டையும் 7-6 என கைப்பற்றியது. இதன்மூலம் 6-4, 7-6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற போபண்ணா - பாபோஸ் ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து