முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 25 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

ஜகார்த்தா : இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முன்னேறியுள்ளார்.

2-வது சுற்று...

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சூப்பர்சீரிஸ் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் நேற்று முன்தினம் (23-ம் தேதி) தொடங்கின. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், சீனாவின் சென் சியோசினை எதிர்கொண்டார்.

நேர்செட்டில்...

இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சாய்னா முதல் செட்டை 21-12 என கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சாய்னா இரண்டாவது செட்டையும் 21-18 என கைப்பற்றினார். இதன்மூலம் 21-12, 21-18 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சாய்னா நேவால் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து