முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் 69-ஆவது குடியரசு தினவிழா கலெக்டர் முனைவர் நடராஜன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் 69-வது குடியரசு தினவிழாவில் கலெக்டர் முனைவர் நடராஜன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்,  ராமநாதபுரம், காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் 69-ஆவது குடியரசு தினவிழா நடைபெற்றது. இந்த விழாவில், மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திரப் போராட்டத் தியாகிகளைக் கௌரவித்தார். அதன்பின்பு சிறப்பாகப் பணியாற்றிய 32 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கத்தினையும், 40 காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 83  அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து முன்னாள் படைவீரர்கள் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, சமூகநலத்துறை,  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் ஆகிய துறைகளின் சார்பாக மொத்தம் 96 பயனாளிகளுக்கு ரூ.1கோடியே 34லட்சத்து 621 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவிகளையும் வழங்கினார்.
 பின்னர் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் அரசு இசைப்பள்ளி ஜவஹர் சிறுவர் மன்றம், ராமநாதபுரம் எம்.ஜி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி வ.உ.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமேஸ்வரம் எஸ்.பி.ஏ. மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சார்ந்த 200 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர்; ரா.பேபி, மாவட்ட ஆட்சியர்  நேர்முக உதவியாளர் (பொது) செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வ.முருகானந்தம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் என்.சுஜிபிரமிளா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, உதவி ஆட்சியர் (பயிற்சி) பி.மணிராஜ் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், முக்கியப் பிரமுகர்கள், மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து