முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு தினவிழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் லதா வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018      சிவகங்கை
Image Unavailable

சிவகங்கை.- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில்  நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.லதா, வருகை தந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன், வரவேற்றார். பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் காலை 8.05 மணியளவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
         நிகழ்ச்சியினைத் தொடர்ந்து, முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் 9 பயனாளிகளுக்கு ரூ.2,25,000 - மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1,17,680 - மதிப்பிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.16,000 - மதிப்பிலும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ5,520 - மதிப்பிலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.6,93,150 - மதிப்பிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பயனாளிக்கு ரூ.30,000 - மதிப்பிலும், வருவாய்த்துறை சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில் 42 பயனாளிகளுக்கு ரூ.5,96,750 - மதிப்பிலும், மாவட்ட தொழிலாளர் நல அலுவலகம் சார்பில் 18 பயனாளிகளுக்கு ரூ.2,30,000 - மதிப்பிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.11,400 - மதிப்பிலும், மாவட்ட சமூகநலத் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.40,000 - மதிப்பிலும், மகளிர் திட்டம் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.19,50,000 - மதிப்பிலும், ஆக மொத்தம் 108 பயனாளிகளுக்கு ரூ.39,15,500 - மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் க.லதா,வழங்கினார்.
          மேலும், காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த தமிழக முதலமைச்சரின் விருது 33 நபர்களுக்கும், சிறப்பாக பணிபுரிந்த 49 பணியாளர்களுக்கும் பதக்கம் மற்றும் நற்சான்றிதழ்களும், வருவாய்த் துறை மற்றும் பிறத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 103 பணியாளர்களுக்கு சான்றிதழ்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
        பின்னர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி சிவகங்கை, ஹோலி ஸ்பிரிட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சீகூரணி, காளையார்கோவில், சிதம்பரம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, கோட்டையூர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி திருப்புவனம், மன்னர் நடுநிலைப்பள்ளி, சிவகங்கை, சகாயராணி மகளிர் மேல்நிலைப்பள்ளி சூசையப்பர்பட்டிணம் ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 422 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகளும், யோகாவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து