இளையராஜாவிற்கு ரஜினி, கமல் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018      சினிமா
rajini advice kamal 2017 10 1

சென்னை, பத்ம விபூஷண் விருது பெற்ற இளையராஜாவிற்கு நடிகர் ரஜினி, கமல், விஷால் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதன்படி பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகர்கள் ரஜினிகாந்த் போனிலும், கமல்ஹாசன், விஷால் ஆகியோர் டுவிட்டரிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கமல் தனது டுவிட்டர் பக்கத்தில்,  தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது என்று பதிவு செய்திருக்கிறார்.


விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், நாட்டின் 2-வது உயரிய குடிமகனுக்கு வழங்கப்படும் பத்ம விபூஷண் விருது இசையின் கடவுள் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அனைவரும் பெருமை படுகிறோம்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து