முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக என்பது அம்சம் அல்ல அதுஒரு வம்சம் இபிஎஸ், ஒபிஎஸ் சிறப்பாக ஆட்சி, கட்சி்யை வழி நடத்துகிறார்கள் அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி பேச்சு

வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018      விருதுநகர்
Image Unavailable

சிவகாசி, ஜன. 26: அதிமுக என்பது அம்சம் அல்ல அதுஒரு வம்சம் என்றும் தமிழகத்தில் இபிஎஸ், ஒபிஎஸ் சிறப்பாக ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்தி வருகின்றனர் என்றும் சாத்தூரில் நடைபெற்ற வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி பேசினார்.
விருதுநகர் மாவட்ட மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் சேதுராமானுஜம் தலைமையில் சாத்தூரில் நடைபெற்றது. கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசும்போது, அண்ணா வகுத்து கொடுத்த பாதையில் புரட்சித்தலைவர் சென்றார். பொன்மனச்செல்வன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வகுத்துக் கொடுத்த பாதையில் ஜெயலலிதா சென்றார். ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த பாதையிலே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆட்சி, கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்தி வருகின்றனர். மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் தகுதி அதிமுகவிற்கு மட்டுமே உண்டு. 1969வரை தமிழ் மொழி போராட்டம் நடைபெற்றது. 1969ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்ச கட்டம் அடைந்தது. மொழிப்போர் தியாக போராட்டத்தில் தியாகி தாழமுத்து நடராஜன்  சிறைச்சாலையில்  அடிபட்டு இறந்தார். மொழிக்காக முதல் மரணம் அடைந்த அவர் நினைவாக சென்னையில் நினைவு மாளிகை நிறுவப்பட்டுள்ளது. மொழிப்போர் தியாகிகளை மதித்து அவர்களுக்கு சிலை வைத்து அழகுபார்த்தவர் ஜெயலலிதா. தியாகி சங்கரலிங்கநாடாருக்கு 77லட்சம் மதிப்பீட்டில் மண்டபம் அமைத்து கொடுத்தவர் ஜெயலலிதா அவர்கள்தான்.. மொழிப்போர் தியாகிகளை மதிக்கும் ஒரே கட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மட்டும்தான். தியாகிகளை மதிப்பதில் இந்த இயக்கத்திற்கு மாற்றாக எந்த கட்சியும் கிடையாது. கீழப்பாவூர் சின்னச்சாமி, சண்முகம் உட்பட மொழிக்காக போராடிய தலைவர்களை மதிக்கும் கட்சி அதிமுக மட்டும்தான். அது மட்டும்மல்ல நமது நாவுக்கரசர் காளிமுத்து அவர்கள், சீனிவாசன் அவர்கள், உட்பட பல்வேறு தலைவர்கள் மொழிக்காக சிறை சென்ற தியாக செம்மல்கள்.  தமிழுக்காக திமுகவினர் சிறை சென்றதில்லை. தமிழ் மொழிக்காக திமுக எதுவும் செய்யவில்லை. ஆனால் மொழிக்காக போராடியவர்களின் பலனை கருணாநிதி குடும்பம் அனுபவித்து கொண்டது. கட்சி நடத்துவதிற்கு தேவையான பணத்தை கருணாநிதி குடும்பம்  கொள்ளையடித்து வைத்துள்ளது.
 இன்றைக்கு கருணாநிதியை ஓரம் கட்டி ஸ்டாலின் கட்சியை கைப்பற்றி விட்டார். அதிமுகவில் கடைக்கோடி நிர்வாகி கூட 20ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பணியில் மக்களோடு செயலாற்றிக் கொண்டிருப்பார். அதிமுகவை வீழ்த்திவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டு ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. இது நடக்கவே நடக்காது. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த இரட்டை இலை சின்னம் இருக்கும்வரை தமிழகத்தில் அதிமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது. தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். கூடிய விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், சிவகாசி உட்பட அனைத்து உள்ளாட்சி பதவிகளையும் அதிமுக கைப்பற்றும். விருதுநகர் மாவட்டம் அதிமுகவின் எக்கு கோட்டை என்பதை மீண்டும் நிருபிப்போம். மக்கள் பணியில் நாங்கள் இன்னும் கடுமையாக பணியாற்றுவோம். அத்தனை தடைகளையும் தாண்டி அதிமுக தொடர்ந்து வெற்றிபெற்றுக்கொண்டே இருக்கும். அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று செயல்பட்டு வருபவர்களுக்கு அது கனவாகவே இருக்கும். மக்கள் நலன் மீது அக்கரை கொண்டு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசிற்கு பொதுமக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில் விருதுநகர்நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் , ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பி்னர் அன்வர் ராஜா. ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா, மாவட்ட பொருளாளர் ராஜவர்மன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை, ராமராஜ், வேல்முருகன், பூமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், நகர செயலாளர் வாசன், முன்னாள் நகர்மன்ற தலைவர் டெய்சிராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன் செய்திருந்தார். 
 
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து