முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா ஓபன் கலப்பு இரட்டையர்: ரோகன் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓபன்டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கலப்பு இரட்டையர்...
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஹங்கேரியின் பாபோஸ் ஜோடி வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இறுதிக்கு முன்னேற்றம்...
இந்த ஜோடி அரையிறுதியில் மார்ட்டின்ஸ் சன்சேஸ், டிமாலின்சர் ஜோடியை எதிர்க்கொண்டது. இந்நிலையில் 7-5, 5-7, 10-6 என்ற செட் கணக்கில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது. பாபோஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் கிரிஸ்டினா மல்டினோவிக்குடன் இணைந்து கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். இது இரண்டாவது பட்டத்திற்கான இறுதி போட்டியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து