முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேஷிய பேட்மிண்டன்: பி.வி.சிந்துவை வீழ்த்தி சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

ஜகர்த்தா: இந்தோனேஷிய பேட்மிண்டன் போட்டியில் பிவி சிந்துவை வீழ்த்தி சாய்னா அரையிறுதிக்கு சென்றார்.

2-வது சுற்றில்...
மொத்தம் ரூ.2¼ கோடி பரிசுத்தொகைக்கான இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டங்களில் சாய்னா நேவால் (இந்தியா) 21-12, 21-18 என்ற நேர் செட்டில் சீனாவின் சென் ஜியாவ்ஸினையும், பி.வி.சிந்து (இந்தியா) 21-12, 21-9 என்ற நேர் செட்டில் மலேசியாவின் ஹோ ஜின் வெய்யையும் வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

சாய்னா ஆதிக்கம்...
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனைகளான சாய்னாவும், சிந்துவும் கால்இறுதியில் நேருக்கு நேர் சந்தித்தனர். போட்டியில் பிவி சிந்துவை வீழ்த்தி சாய்னா அரையிறுதிக்கு சென்று உள்ளார். அனுபவ வீராங்கனையான சாய்னா, பிவி சிந்துவின் ஒவ்வொரு தவறையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். முதல் செட்டை தொடங்கிய வேகத்தில் தனக்கு சாதமாக்கிய சாய்னா 21-13 என்ற நேர் செட் கணக்கில் செட்டை தனதாக்கினார். இரண்டாவது செட்டை தொடங்கியதுமே சிந்துவின் கை ஓங்கியது, சிந்து 7-3 என்ற நிலையில் முன்னிலை பெற்றார். சாய்னா போட்டியை சிந்துவின் வேகத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை. ஒருகட்டத்தில் 11-10 என்ற நிலையில் இருவரும் போராடினர். இதனையடுத்து தன்னுடைய அனுபவ ஆட்டத்தை தொடங்கிய சாய்னா 14-13 என முன்னிலை பெற்றார்.

முன்னேற்றம்...
அதேபோன்று அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று முதல் ஆட்டத்தை போன்று செட்டை தன்வசப்படுத்த தொடங்கினார். 18-14 என முன்னிலை பெற்றார் சாய்னா. பிவி சிந்துவும் ஆட்டத்தை விட்டுவிடவில்லை தொடர்ந்து சாய்னாவிற்கு நெருக்கடியை கொடுத்தார். 20-19 என்ற நிலைக்கு முன்னேறி வந்தார். ஆனால் சாய்னா ஆட்டத்தை மூன்றாவது செட்டிற்கு நகர்த்த விடக்கூடாது என்பதில் நேர்த்தியாக கவனம் செலுத்தி அடுத்தப்புள்ளியை பெற்று 21-19 என செட்டை தன்வசப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறி சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து