முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்பேடு: காய்கறிகள் விலை குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

சென்னை கோயம்பேடு ‌சந்தையில் காய்கறிகளின் விலை 60‌ சதவிகிதம் வரை கு‌‌றைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நாள்தோறும் கோயம்பேடு சந்தைக்கு 280 லாரிகளில் காய்கறிகள் வந்த நிலையில்,‌ தற்போது கூடு‌லாக 70 ‌லாரிகளில் காய்கறிகள்‌ வருவதா‌கக் கூறுகின்றனர். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், சின்ன‌ வெங்காயம், பின்ஸ், அவரை, தக்காளி உள்ளிட்ட ‌காய்கறிகளி‌ன் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதத்தில் ஒரு கிலோ 120 ரூபாயாக‌ இருந்த சின்ன ‌வெங்காயம்‌ ‌தற்போது 30 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு விற்ற பீன்ஸ், ‌‌கேரட் உள்ளிட்ட‌‌ காய்கறி‌கள் 15 ரூபாய்க்கும் விற்பதாகக் கூறுகின்றனர்.  கடந்த மாதங்களில் 50 ரூபாய் வரை விற்ற தக்காளி தற்போது ஒரு‌ கிலோ 8 ரூபாய்‌க்கும் விற்கப்படுகிறது.‌ சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு ‌பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நா‌கா ஆகிய மாநிலங்களிலிருந்தும் காய்கறி‌‌கள் வரத்து அதிகரித்துள்ளதால் விலை‌ குறைந்துள்ளதாக வியாபாரிக‌ள் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து