முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி பேட்டிங் 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடி இறுதிக்கு முன்னேறியது இந்தியா

செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

கிறிஸ்ட்சர்ச்: ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் 29.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி பேட்டிங்
ஐ.சி.சி.யின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது.  இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிறிஸ்ட்சர்ச் நகரில் நேற்று அரையிறுதி போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.  இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரவீன் ஷா (41), மன்ஜோட் கல்ரா (47) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கில் அபாரம்...
அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த சுப்மேன் கில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.  அவருடன் விளையாடிய ஹார்விக் 20 ரன்களுடன் வெளியேறினார்.  அதன்பின் அனுகுல் (33), சிவம் மவி (10) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.  மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களே எடுத்தனர்.

பாக். திணறல்...
போட்டியின் முடிவில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது.  இதனால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 273 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இம்ரான் ஷா (2) மற்றும் முகமது ஆலம் (7) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

69 ரன்களில்...
அதனை அடுத்து நசீர் (18), ஆசிப் (1), அம்மட் ஆலம் (4), டஹா (4), சாத் கான் (15), ஹசன் கான் (1), அப்ரிடி (0) மற்றும் இக்பால் (1) ரன்களில் ஆட்டமிழந்தனர்.  மூசா (11) ஆட்டமிழக்காமல் உள்ளார். அந்த அணி 29.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 69 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து