முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வார்டு மறுவரையறை ஆட்சேபனை மனுக்கள் மீதான கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் என்.வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018      தூத்துக்குடி

தூத்துக்குடி கலெக்டர் என்.வெங்கடேஷ்   தலைமையில், மாவட்ட ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை பிரேரணை மீது பெறப்பட்ட கருத்துக்கள்ஃஆட்சேபனை மனுக்கள் மீதான கருத்துக்கள் கேட்பு முன்னோடி கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.      கூட்டத்தில் கலெக்டர் என்.வெங்கடேஷ்   தெரிவித்ததாவது:

கருத்துக்கள் கேட்பு  கூட்டம்

தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தால் தெரிவித்த விதிமுறைகளின் படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு;ள்ளது. மேலும், ஏற்கனவே, நடைபெற்ற கூட்டத்தில் பொது மக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் பரிசிலனையில் உள்ளது. இந்த மனுக்கள் தவிர வேறு ஏதேனும் ஆட்சேபணை இருக்கும் பட்சத்தில்  கருத்துக்கள் தெரிவிக்கும் வகையில் இன்று முன்னோடி கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள், பொது மக்கள் கலந்து கொண்டு கருத்துக்கள் மற்றும் ஆட்சேபணை தெரிவித்தார்கள். என கலெக்டர்  தெரிவித்தார்கள்.இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் பி.கீதாஜீவன், மாநகராட்சி ஆணையர் டாக்டர்.அல்பி ஜாண் வர்க்கீஸ்  சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) லெட்சுமணன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மாகின் அபுபக்கர், நகராட்சி ஆணையாளர்கள் அச்சையா (கோவில்பட்டி), பொன்னம்பலம் (காயல்பட்டிணம்), அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேருராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து