அரியலூர் மாவட்டம், இடங்கண்ணி கிராமத்தில் பொதுமக்கள் சிறப்பு முகாம் : முதன்மை மாவட்ட நீதிபதி எம்.டி.சுமதி தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      அரியலூர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், இடங்கண்ணி கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் தொடர்பான பொதுமக்கள் சிறப்பு முகாம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத்தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி எம்.டி.சுமதி தலைமையில், நடைபெற்றது.

 சிறப்பு முகாம்

இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், 5 நபர்களுக்கு வாரிசு சான்றிதழ்களை வழங்கி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத்தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி பேசியதாவது :- மாவட்ட நிர்வாகம் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து சட்ட விழிப்புணர்வு மற்றும் இலவச சட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும், அரசின் நலத்திட்டங்கள் பெறுவது தொடர்பாகவும், சிறப்பு விழிப்புணர்;வு முகாம் நடைபெற்றது.இம்முகாமில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை 43 மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அனுப்பப்பட்டு, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு முகாம்

கிராமங்களில் இதுபோன்ற விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுவதால், அரசுத்துறையின் சார்ந்த அனைத்து திட்டங்கள் மற்றும் சட்ட விழிப்புணர்வுகள் பொதுமக்களுக்கு எளிதாக சென்றடையும். கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களுடைய கல்வி தரத்திற்கேற்ப தொழிற்சார்ந்த கல்விகள் மற்றும் இயற்கை விவசாய முறைகளை பின்பற்றி தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத்தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி எம்.டி.சுமதி பேசினார்கள். இந்நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதி ஆர்.பாரதிராஜா, வழக்கறிஞர் சங்க தலைவர்கள் ஜெய்குமார் (அரியலூர்), ஸ்டாலின், சிவராமன் (ஜெயங்கொண்டம்) மற்றும் வழக்கறிஞர்கள், அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக உடையார்பாளையம் கோட்டாட்சியர் ப.டினாகுமாரி அனைவரையும் வரவேற்றார். முடிவில், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பி.சரவணன் நன்றியுரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து