பட்ஜெட்டில் கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைகிறது

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      வர்த்தகம்
petrol-diesel-vehicle

புதுடெல்லி,  பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளது நடுத்தர மக்களுக்கு பட்ஜெட்டில் சற்றே ஆறுதல் அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.

மத்திய எண்ணெய் அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று நிதியமைச்சர் இந்த அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளார். நாளுக்கு நாள் ஏற்றம் கண்டு வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நடுத்தர மக்களின் கழுத்தை நெறிக்கிறது. இதற்கு ஓரளவு நிம்மதியளிக்கும் வகையில் பிராண்டட் மற்றும் பிராண்டட் அல்லாத பெட்ரோல் மற்றும் டீசலின் கலால் வரியை குறைத்து நிதியமைச்சர் அருண்ஜெட்லி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

 பிராண்டட் அல்லாத பெட்ரோலுக்கு கலால் வரியாக லிட்டருக்கு ரூ. 6.48 வரை வசூலிக்கப்படுகிறது, இது ரூ. 4.48 என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதே போன்று பிராண்டட் பெட்ரோலின் அடிப்படை கலால் வரியானழத லிட்டர் ரூ. 7.66 என்ற அளவில் உள்ளது ரூ.5.66 எஎன்ற குறைக்கப்பட்டுள்ளது.
இதே போன்று பிராண்டட் அல்லாத டீசலின் அடிப்படை கலால் வரி லிட்டருக்கு ரூ. 8.33 வசூலிக்கப்படுகிறது, இது ரூ. 6.33 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிராண்டட் டீசல் மீதான வரி என்பது ரூ. 10.69ல் இருந்து ரூ. 8.69ஆக குறைந்துள்ளது.

பெட்ரோலின் விலையானது டெல்லி, மும்பை, பெங்களூரு, புனேவில் ரூ. 80ஐ தொட்டுள்ளது, சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.77 என்ற விலையில் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை, விநியோகம் இடையே உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் தினசரி பெட்ரோலியப் பொருட்களின் விலையில் மாற்றம் வருகிறது. டீலர்களைப் பொருத்து ஒவ்வொரு இடத்திற்கும் பெட்ரோல், டீசலின் விலையில் மாற்றம் வருகிறது. ரீடெயில் எரிபொருள் விற்பனை கடந்த ஆறு மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது கச்சா எண்ணெய் விலை கடந்த 3 ஆண்டுகளில் 45 சதவீத உயர்வைக் கண்டு பேரல் ஒன்று 69 டாலருக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதத்தில் மத்திய பெட்ரோலியத் துறை நிதியமைச்சகத்துடன் ஆலோசித்து பெட்ரோல், டீசல் மீதாக கலால் வரியை லிட்டருக்கு ரூ. 2 குறைத்தது. கடந்த 2017ம் ஆண்டில் பெட்ரோல் டீசலுக்கான தேவை அதிக அளவில் இருந்ததால் விலையில் மாற்றம் கொண்டு வர முடியவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளை விட 2017ல் எரிபொருளின் பயன்பாடு 4 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து