கீழையூர் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் ஆய்வு

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      நாகப்பட்டினம்
pro nagai

 

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 கலெக்டர் ஆய்வு

 கீழையூர் ஒன்றியம் வெண்மணச்சேரி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்(2017-18) கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும், கீழையூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்(2017-2018) கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திறளான மரக்கன்று நடும் பணிகளையும், வாழக்கரை ஊராட்சியில் தாய் திட்டத்தின்(2016-17) கீழ் ரூ.6.48 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் நீரேற்றும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும், மேலவாழக்கரை ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்(2016-17) கீழ் ரூ.300.50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் மேலவாழக்கரை - ஏர்வைக்காடு; சாலை அமைக்கும் பணிகளையும், திருப்பூண்டி கிழக்கு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்(2017-2018) கீழ் ரூ.8.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும், பிரதாபராமபுரம் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் "அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும், மாவட்ட கலெக்டர் முனைவர் சீ.சுரேஷ்குமார், பார்வையிட்டார்.

 இந்த ஆய்வின் போது உதவி இயக்குநர்(ஊரக வளர்ச்சி முகமை)செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதிமணி, பாஸ்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், உதவிப்பொறியாளர் பூர்ணச்சந்திரன், வட்டாட்சியர் மணிவண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து