நாகப்பட்டினம் முதற்கடற்கரைச்சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2018      நாகப்பட்டினம்
pro nagai

நாகப்பட்டினம் முதற்கடற்கரைச்சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தை மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கற் சிற்பங்கள்

ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகம் 1999ம் வருடத்தில் தொடங்கப்பட்டது. இவ்வருங்காட்சியகத்தில் தொல்லியல் சின்னங்கள், கற்சிற்பங்கள், மாணிடவியல், விலங்கியியல், தாவரவியல், நாணயங்கள், ஓவியங்கள் தபால் தலைகள் எனப் பல்வேறு காட்சிக்கூடங்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு மாதந்தோரும் சிறப்பு கண்காட்சிகள், போட்டிகள், சிறப்புச் சொற்பொழிவுகள் எனப் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச அனுமதியும், ஏனைய பார்வையாளர்களுக்கு ரூபாய் ஐந்தும் வசூலிக்கப்படுகிறது.

இவ்வருங்காட்சியகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிடைத்த புராதண சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வடக்குப் பொய்கை நல்லூரில் கிடைத்த திமிங்கலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அழிந்து போன புதுவெளிக்கோபுரம் மக்களின் பார்வைக்காக காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்

காட்சிக்கூடத்தின் பராமரிப்பு பணி பற்றியும், புதிதாக இடம் தேர்வு செய்வது குறித்தும் துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர்.மீ.மருதுபாண்டியன், நகராட்சி ஆணையர் ஜான்சன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து