முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

19வயது உலகக் கோப்பை கிரிக்கெட் வெற்றி: இந்திய அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

சென்னை: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது பிருத்விஷா தலைமையிலான இளம் இந்திய அணி.

இந்திய அணிக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

"19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, சாதனை படைத்துள்ள இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுநாள் வரை, யு-19 உலக கோப்பையை எந்த அணியும் 3 முறைக்கு மேல் வென்றதில்லை. நியூசிலாந்தில் உள்ள மவுன்ட் மவுங்கனுயி நகரில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் மகத்தான வெற்றிபெற்று, முதல்முறையாக இந்திய அணி 4-வது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இத்தகைய மாபெரும் சாதனையை நிகழ்த்தி நாட்டிற்கும், கிரிக்கெட் விளையாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள கேப்டன் பிருத்விஷா தலைமையிலான கிரிக்கெட் அணிக்கும், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. மன்ஜோத் கல்ராவிற்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து