முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், தலைமையில் நடைபெற்றது.

வங்கிக்கடன்

மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 14 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்; குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 172 என மொத்தம் 186 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு மாவட்ட கலெக்டர்; சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் 3 பயனாளிகளுக்;கு முதியோர் உதவித்தொகை வழங்க ஆணையினையும், 3 பயனாளிகளுக்கு விதவை உதவித் தொகை வழங்க ஆணையினையும், 1 பயனாளிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்க ஆணையினையும், கீழ்வேளுர் வட்டம் கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி..பவித்ரசுந்தரி என்பவருக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலருக்கான பணி நியமன ஆணையினையும், வேதாரண்யம் வட்டம், ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தியைச் சேர்ந்த வி.விஜயகுமாரி என்பவருக்கு சிறுதொழில் செய்வதற்கு மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.20,000 க்கான காசோலையினையும், மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.முருகேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து