முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க வீரர் டி காக், இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய போட்டியில் இருந்து விலகல்

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

செஞ்சூரியன் : மணிக்கட்டு காயத்தால் அவதிப்படும் தென்ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் இந்தியாவிற்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

இந்திய முன்னிலை...

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டி முடிவடைந்ததையடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 1-ந்தேதி டர்பனில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மணிக்கட்டில் காயம்

இந்தியாவின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 118 ரன்னில் சுருண்டது. தொடக்க பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பரும் ஆன டி காக் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது குயின்டான் டி காக்கின் இடது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய இரண்டு முதல் நான்கு வாரங்கள் ஆகும் என்பதால், இந்தியாவிற்கு எதிரான எஞ்சிய ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் இருந்து குயின்டான் டி காக் விலகியுள்ளார்.

அணிக்கு பின்னடைவு...

ஏற்கனவே டி வில்லியர்ஸ், டு பிளிசிஸ் ஆகியோர் காயத்தால் விளையாடாமல் உள்ளனர். இந்நிலையில் குயின்டான் டி காக்கின் காயம் தென்ஆப்பிரிக்கா அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது. காயத்தால் முதல் மூன்று ஒருநாள் போட்டியில் டி வில்லியர்ஸ் பங்கேற்கவில்லை. முதல் போட்டியில் விளையாடிய டு பிளிசிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் டி காக் குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து