முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி ரூ.65 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      சென்னை

 

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக் கொண்டார். மேலும், இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யவும், உதவிகள் வழங்கிடவும் கோரி மனுக்களை அளித்தனர்.

உரிய நடவடிக்கை

இதில் நிலம் சம்பந்தமாக 86 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் 45 மனுக்களும், சமூக நலத்திட்டம் 5 மனுக்களும், குடும்ப அட்டை 2 மனுக்களும், ஆதிதிராவிடர் ஃ பிற்படுத்தப்பட்டோர் நலம் 3 மனுக்களும்;, வேலைவாய்ப்பு 88 மனுக்களும், சட்டம் மற்றும் ஒழுங்கு 9 மனுக்களும், உழவர் பாதுகாப்புத் திட்டம் 1 மனுவும், இதரதுறை 50 மனுக்களும், சான்றிதழ் 1 மனுவும்;, வேளாண்மை ஃ கால்நடைத்துறை ஃ மீன்வளம் 6 மனுக்களும், அடிப்படை வசதி ஃ போக்குவரத்து ஃ சுகாதாரம் 2 மனுக்களும், ஊரக ஃ நகர்ப்புற வளர்ச்சி 20 மனுக்களும் மற்றும் கல்வி 6 மனுக்களும் ஆக மொத்தம் 324 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக மாவட்ட தேர்தல் அலகு இந்திய அரசியலமைப்பு சார்ந்து நடைபெற்ற தேசிய வினாடி வினா போட்டியில் கலந்துகொண்ட 17 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், 8-வது தேசிய வாக்காளர் நாள் விழாவில் பங்கேற்ற 48 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், முன்னாள் படைவீரர் நலன் சார்பாக 2 நபர்களுக்கு திருமண (ரூ.40 ஆயிரம்) உதவித்தொகைக்கான காசேலையையும், 3 நபர்களுக்கு ஈமச்சடங்கு (ரூ.25 ஆயிரம்) உதவித்தொகைக்கான காசோலையையும் மாவட்ட ஆட்சித் தலைவர் இக்கூட்டத்தில்;, மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சீ.ஜானகிராமன், முன்னாள் படைவீரர் நலன் அலுவலர் அமிருன்னிஷா மற்றும் வட்டாட்சியர்(தேர்தல்)லட்சுமி,அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து