முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழுக்கு பெருமை சேர்ந்த சங்கரவள்ளிநாயகம் ஐயாவுக்கு அதிமுக அரசு புகழ் சேர்க்கும்:அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பெருமிதம்

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      தூத்துக்குடி
Image Unavailable

கோவில்பட்டியில் உள்ள விசுவகர்ம பள்ளி முன்பு அமைக்கபட்ட திருவள்ளுவர் திடலில் ஏழை பேராசிரியர், தமிழ் உணர்வு உள்ள மண்ணின் மைந்தர் அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அவர்களின் தொடர்முயற்ச்சியால் உருவாக்கபட்ட திருவள்ளுவர் மன்றத்தின் 46ம் ஆண்டு நிறைவு விழா அவரின் தமிழ் இலக்கிய வாரிசுகள், மாணக்கர்களால் விடாமுயற்ச்சியின் பொருட்டு கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது.

திருவள்ளுவர் மன்றத்தின் 46ம் ஆண்டு நிறைவு விழா

பலவேறு தமிழ்இன விரோதிகளால் ஏற்படுத்தபட்ட தடைகளையும் மீறி நடந்த விழாவுக்கு தலைவர் கருத்தபாண்டி தலைமை வகித்தார். துணைதலைவர் திருமலை முத்துசாமி, செயலாளர் நம்.சீனிவாசன், இணைசெயலாளர் சான்கணேசு, பொருளாளர் முத்துராசு, தணிக்கையாணர் அந்தோணிராசு, வழக்கறிஞர் பரமசிவம், நெறிபடுத்துனர்கள் இலக்குமணபெருமாள், பரமசிவம், விநாயகாரமேசு, ஆகியோர்களின் கடும் முயற்ச்சியால் நடந்த நிகழ்வில் இறுதி நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தலைமை ஏற்று பேசுகையில் தமிழகத்தில் முதன் முதலாக சென்னையில் பேரறிஞர் உலக தமிழ் மாநாட்டினை நடத்தினர், அவரை வழியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜீ.ஆர், சங்கம் வளர்த்த மதுரையில் 1981ல் 5வது உலக தமிழ் மாநாட்டை நடத்தி , தஞ்சையில் தமிழ்பல்கலைக்கழகம் நிறுவி பெருமை சேர்த்தார். அதே வழியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தஞ்சையில் உலக தமிழ்மாநாட்டினை நடத்தி, நான்காம் தமிழாம் அறிவியல் தமிழை அறிமுகப்படுத்தினர். அந்த வழியில் தான் நாங்களும் தமிழ் உணர்வோடு வந்த காரணத்தினால், பெயரளவில் தமிழ் உச்சரிப்பது மட்டுமல்லமால், அம்மாவின் அரசினை நடத்தி கொண்டு இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், ஹார்டுபல்கலைகழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைக்க வேண்டும் என்பதற்காக 10கோடி ரூபாய் வழங்கி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளது அம்மாவின் அரசு என்பதனை பெருமையுடன் கோடிட்டு காண்பிக்க விரும்புகிறேன். அதன் பிறகு தான் தமிழ் அறிஞர்கள், தமி@ழ் ஆர்வலர்கள் நிதி உதவி வழங்கி வருகின்றனர். ஒரு மனிதன் தனது வாழ்க்கை நெறியை செம்மைபடுத்தி கொள்ள தெய்வபுலவர் திருவள்ளுவரின் திருக்குறளை பின்பற்றினால் போதும் என்று எடுத்துரைத்து மட்டுமின்றி, உலகம் முழுவதும் தமிழ் பரவ வேண்டும், திருக்குறளின் பெருமையை மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்க ரூ. 5கோடி ரூபயாய் ஒதுக்கி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டது மட்டுமின்றி அதனை செயல்படுத்தி பெருமையை சேர்த்தார். அது மட்டுமல்லாது பாரதிய ஜனதாகட்சியை சேர்ந்த எம்.பி. தருண் விஜய், திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமாரியில் இருந்து கொண்டு சென்ற போது, சென்னையி@ல் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் சார்பில் 2 அமைச்சர்களையும் பங்கேற்க வைத்தது மட்டுமின்றி, அந்த சிலையை பாதுகாப்புடன் கொண்டு சேர்க்கும் பணியும் ஜெயலலிதா செய்ய உத்தரவுபிறப்பித்து செயல்படுத்தி காட்டினார். தமிழுக்கு பெருமை சேர்ந்த திருவள்ளுவரின் பெருமைக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அதே பணியை கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற சிறப்பாக செய்து வருகிறது. இதன் 50வது பொன்விழா ஆண்டில் உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை கோவில்பட்டி வரழைத்து, மிகப்பெரிய அளிவில் நடத்திட என்னால் முடிந்த உதவிகளை,நான் எந்த நிலையில் இருந்தாலும் உறுதியாக செய்வேன் மேலும் தமிழுக்கு பெருமைசேர்த்த எனது ஏழை பேராசிரிய பெருந்தகை ஐயா அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அவர்களுக்கும், தமிழுக்கும், திருவள்ளுவருக்கும் அதிமுக அரசு என்றும் பெருமை சேர்க்கும் என்றார். இதனை தொடர்ந்து அதிமுக செய்தி தொடர்பாளார் வைகைச்செல்வன் வள்ளுவம் என்ற வாழ்வியல் அறம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதையெடுத்து வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி முன்னாள் முதல்வர் அப்துல்காதர் தலைமையில் சிந்தனைப்பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில் திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப்பாண்டி, புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லெட்சுமணப்பெருமாள், தொழில் அதிபர் எம்.எஸ்.எஸ்.வி.பாபு, இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருக்குறள் ஒப்புவித்தலில் அசத்திய மாணவிகள்: திருவள்ளுவர் மன்ற 46ஆம் ஆண்டு நிறைவு விழாவின் 2ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்டம், சாத்தூரையடுத்த ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் பயின்று வரும் 8ஆம் வகுப்பு மாணவி ரா.பிருந்தாலட்சுமி மற்றும் அதே பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி ர.நாகஜோதி ஆகிய இருவரும் 1,330 திருக்குறளையும் ஒப்புவித்தனர்.மேலும், விழாவில் பங்கேற்ற ஆர்வலர்கள் திருக்குறள் அதிகாரத்தின் தலைப்பை குறிப்பிட்டு கேட்டாலும், திருக்குறளின் வரிசை எண்ணை குறிப்பிட்டு கேட்டாலும் மாணவிகள் அந்த திருக்குறளை அடிபிறழாமல் ஒப்புவித்தது விழாவில் பங்கேற்ற அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, திருக்குறளை ஒப்புவித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து