வால்மார்ட்டுடன் பிளிப்கார்ட் கூட்டு...

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      வர்த்தகம்
flipkart

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் மளிகைப் பொருட்கள் விற்பனையிலும் ஈடுபட உள்ளது. ஆனால் மளிகைப் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முதலீடு, இந்தியா போன்ற நாடுகளில் அதிக ரிஸ்க்கானது என்பது யதார்த்தம். பிக்பாஸ்கட் போன்ற மளிகைப் பொருட்கள் இ-காம் நிறுவனங்களால்கூட இந்த துறையில் குறிப்பிடத்தக்க சந்தையை பிடிக்க முடியவில்லை. ஆனால் புதிய வழிகளில் தனது ஆட்டத்தை தொடங்க உள்ளது பிளிப்கார்ட்.

வால்மார்ட்டின் முதலீட்டைப் பெறுவதன் மூலம் பிளிப்கார்ட் நிறுவனம் ஆன்லைன் மளிகை சந்தையில் துணிந்து இறங்கும். இதற்காக பிளிப்கார்ட் நிறுவனத்தின் 15 முதல் 20 சதவீத பங்குகளை வால்மார்ட் கையகப்படுத்த உள்ளது. வால்மார்ட்டின் கூட்டணிக்கு பின்னர் இந்தியாவில் மளிகைப் பொருட்கள் ஆன்லைன் சந்தையை தீவிரப்படுத்தவும் பிளிப்கார்ட் திட்டம் வைத்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் ஆறு நகரங்களில் மளிகை பொருட்கள் விற்பனைக்கான சேகரிப்பு மையத்தை உருவாக்கவும், ஊழியர்களை பணியமர்த்தவும் திட்டம் வைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து