முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைத் தீவில் விடுதலைப் புலிகள் புதைத்த தங்கத்தை தேடும் இலங்கை அரசு

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      இலங்கை
Image Unavailable

முல்லைத்தீவு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் புதைத்த தங்கம் இருப்பதாக நம்பும் இலங்கை ராணுவம், கடற்படை நேற்று முல்லைத்தீவு பகுதியில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் வசம் இருந்த பெருமளவிலான தங்கத்தை இறுதி யுத்த காலத்தில் மண்ணில் புதைத்து வைத்தனர் என்பது செவிவழி செய்தி. புலிகளின் தங்கம் புதைக்கப்பட்ட இடத்தை 9 ஆண்டுகளாக இலங்கை அரசு தேடி வருகிறது. கடந்த மாதம் 17-ந் தேதியன்று முல்லைத் தீவில் தங்கத்தை தேடும் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. 3 மணிநேரம் நடைபெற்ற அகழாய்வுப் பணியில் எதுவும் சிக்கவில்லை. இந்நிலையில் நேற்று மீண்டும் நீதிபதி லெனின்குமார் தலைமையில் புலிகளின் தங்கத்தை தேடும் பணி நடைபெற்றது.

இலங்கை ராணுவம், கடற்படை அதிகாரிகள் அப்போது உடன் இருந்தனர். ஆனால் தங்கப் புதையல் எதுவும் நேற்றும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் மண்ணுக்கு அடியில்தான் புலிகளின் தங்கம் இருக்கிறது என திடமாக நம்புகிறது இலங்கை அரசு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து