முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி ஆட்சி மாற்றம் வந்துவிடும் என்பதால் தான், முதலமைச்சர் ஆளுநருடன் கைகோர்த்துள்ளார் அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      புதுச்சேரி

புதுச்சேரியில் முதல்வர் மற்றும் துணைநிலை ஆளுநர் இருவரின்  விளம்பர மோதல் போக்கினால் மத்திய பட்ஜெட்டில் புதுவை வளர்ச்சிக்கென  கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை.  மத்திய அரசை பலமுறை இருவரும் அணுகியும் கூடுதல் நிதி பெறாமல் கடமையில் இருந்து இருவரும் தவறியுள்ளனர். 2015-2016 ஆம் ஆண்டு மத்திய அரசு இயற்கை பேரிடர் சம்பந்தப்பட்டு 340 கோடி ஒதுக்கப்பட்டது.

மோதல் போக்கு

அதில் 188 கோடியை அப்போதைய முதல்வர் ரங்கசாமி பெற்றுவந்தார். தற்போதைய முதல்வர் எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் செயலற்று இருக்கின்றார். பிஆர்டிசி,பாப்ஸ்கோ,ஏஎப்டி மில் ஊழல் என பல்வேறு குற்றசாட்டுகளை அதிமுக கூறியுள்ள நிலையில் அதையெல்லாம் விட்டு தற்போது மிக்சி கிரைண்டர் வழங்கியதில் ஊழல் நடந்துள்ளது என்று முதல்வர் நாராயணசாமி தற்போது  கூறியுள்ளார்.  தேர்தல் அறிக்கைகளில் கூறியதை  நிறைவேற்றாமல் தேர்தல் அறிக்கையில் கூறாத வீட்டுவரி,மின் கட்டணம்,தண்ணீர் வரி என பல்வேறு வரியை உயர்த்தியுள்ளார் நாராயண சாமி .    புதுச்சேரியில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும். ஆட்சி மாற்றம் வந்துவிடும் என்ற அச்சத்தில் துணைநிலை ஆளுநரிடத்தில் முதல்வர் நாராயணசாமி முழுவதுமாக சரணடைந்துள்ளார். ஆளுநருடன் கை கோர்த்து அனைத்து கட்சியையும் அவமதித்துவிட்டார்.அரசும் மீதும் சபாநாயகர் மீதும் நம்பிக்கை இல்லாததால் ஆளுநர் மீது கொடுக்கப்பட்டுள்ள  உரிமை மீறல் புகாரை திரும்பப்பெறுவோம்.காங்கிரஸூக்கு எதிராக யார் ஆட்சி அமைத்தாலும் அதிமுக அவர்களை ஆதரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து