முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையப்பர் கோவிலில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      கன்னியாகுமரி
Image Unavailable

திருநெல்வேலி மாவட்டத்தில் ஐளுசுடீ-ஐஞசுஊ இணைந்து தூய்மை இந்தியா திட்டம்  கீழ் அருள்தரும் காந்திமதி அம்பாள் அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில்களில் தூய்மை பணிகள்  நடைபெற்றது. இப்பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் கலெக்டர்  தெரிவித்ததாவது-

 தூய்மை பணிகள்  

திருநெல்வேலி மாவட்டத்தில், அருள்தரும் காந்திமதி அம்பாள் அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில்களில் ஐளுசுடீ-ஐஞசுஊ இணைந்து தூய்மை பணிகளை இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள். இவர்களுடன் இணைந்து சுமைல் பவுண்டேசன் நிறுவன உதவியுடன் திருக்கோவிலில் அமைந்துள்ள சிலைகள் மற்றும் ஆலயத்தினை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருக்கோவிலில் உள்ள ஆறு மண்டபங்களும் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுபோன்று திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து திருக்கோவில்களும் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்கோவில்களில் தீ தடுப்பு சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள், உள்கட்டமைப்புகள் தொடர்பான பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில்,  தலைமை பொறியாளர் இராதாகிருஷ்ணன்  தலைமையில் 60 நபர்களும், சுமைல் பவுண்டேசன் நிறுவனத்தின் சார்பாக 20 நபர்களும்,  சமூக ஆர்வர்கள் என மொத்தம் 100க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆய்வின் போது, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, திருநெல்வேலி வட்டாட்சியர் கணேசன், அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து