பங்குச் சந்தை சரிவு: காரணத்தை ஆராயும் அரசு

பங்குச் சந்தையில் ஏற்பட்டுவரும் தொடர் சரிவு குறித்து மத்திய நிதி அமைச்சருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக நிதித்துறைச் செயலர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்தார். இந்த பிரச்சினையை அரசு ஆராயும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், நீண்ட கால முதலீடுகள் மீதான ஆதாயத்துக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, சர்வதேச அளவில் முக்கிய பங்குச் சந்தைகளில் சரிவு காணப்படுகிறது. இது சர்வதேச தாக்கத்தின் விளைவாகும். இதில் அரசாங்கத்தால் என்ன செய்ய இயலும் என்பது ஆராயப்படும் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
View all comments