தங்க நகை நுகர்வு குறையும்

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      வர்த்தகம்
gold 2017-12 31

தங்க நகை நுகர்வு இந்த ஆண்டும் குறைவாக இருக்கும் என்று உலக தங்க கவுன்சில் (டபிள்யூஜிசி) கணித்துள்ளது. நுகர்வு குறைந்து 700 டன் முதல் 800 டன் வரை இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 2017-ல் இது 727 டன்னாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டு சராசரி நுகர்வு 840 டன்னாக இருந் துள்ளது.

தங்க நகைகள் மீது கடந்த ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டது. 1.2 சதவீதமாக இருந்த வரி 3 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மேலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்குவோர் கட்டாயம் தங்களது நிரந்தர கணக்கு எண்ணை (பான்) தெரிவிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இது போன்ற காரணங்களால் தங்க நகை வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஹால்மார்க் கட்டாயம் உள்ளிட்ட கடுமையான விதிமுறைகளும் நகை வர்த்தகத்தைப் பாதித்துள்ளதாக டபிள்யூஜிசி தலைவர் பி.ஆர். சோமசுந்தரம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து