முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் மாசித் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில் மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

ஆலோசனைக் கூட்டம்

 மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் 13 நாள் நடக்கும் மாசித் திருவிழா வரும் 14.02.2018 அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் 20.02.2018 அன்று திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவம் நடைபெற உள்ளது. இத்தேர் திருவிழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பக்தர்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம், மின் விளக்கு, பஸ் வசதி, அத்தியாவசிய தேவைகள் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விழாக்காலத்தின்போது தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து, பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கழிவறைகள், குடிநீர் வசதி ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும். முக்கிய சந்திப்புகள், கிராம தெருக்களில், பழுதான மின் விளக்குகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் உள்ள குப்பைகளை தினந்தோறும் சுத்தம செய்ய வேணடும். அக்னி குளம், பெரிய ஏரியில் பக்தர்கள் குளிப்பதை தடை செய்ய வேண்டும். பேருந்துகள் புறப்படும் இடத்தின் விவரத்தை ஆங்காங்கே பெரிய அளவில் விளம்பரம் செய்ய வேண்டும்.அரசு மருத்துவர்கள் தலைமையில் மருத்துவக் குழுவினர், இரண்டு ஆம்புலன்ஸ் வாகனத்துடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். தீமிதி விழாவின் போது தீயணைப்பு படையினர் தகுந்த பாதுகாப்புகளை செய்ய வேண்டும், பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், குற்றச் செயல்களை தடுக்கவும் அதிக அளவில் காவலர்களை நியமிக்க வேண்டும். பழுதான சாலைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும். மின் கசிவு, மின் விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை ஓர ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நோய் பரவாமல் தடுக்க சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருக்கோவில் அலுவலகம் மற்றும் புறக்காவல் நிலையங்களில் சி.சி.டிவி மூலம் கண்காணிக்கப்பட்டு பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளை அவ்வப்போது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்தார்இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, திண்டிவனம் சார் ஆட்சியர் செல்வி.மெர்சி ரம்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இராஜேந்திரன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், காவல்துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சொக்கநாதன், வெங்கடேஷ், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானகுமார் மற்றும் சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை, மின்வாரியத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து