ஸ்பைஸ்ஜெட் நிகர லாபம் உயர்வு

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      வர்த்தகம்
spicejet 2017 02 25

ஸ்பைஸ்ஜெட் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் என ஒட்டுமொத்த செயல்பாடுகளின் மூலம் டிசம்பருடன் முடிந்த காலாண்டில் நிகரலாபம் ரூ.240 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.181 கோடியாக இருந்தது. நிகர வருமானம் 29 சதவீதம் அதிகரித்து ரூ.2,065 கோடியாக உள்ளது. இதர நிறுவனங்களின் உள்நாட்டு போக்குவரத்து பயணிகள் சேவை சராசரியைக் காட்டிலும் கட்டணம் மற்றும் தூரத்தின் அடிப்படையிலான பயணிகள் சேவை 14 சதவீதம் அதிகரித்துள்ளது. புதன்கிழமை வர்த்தகத்தில் ஸ்பைஸ்ஜெட் பங்கு 5.15 சதவீதம் உயர்ந்து ரூ.134.50-ல் வர்த்தகம் முடிந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து